திருச்சுழி அருகே புதுமணப்பெண் காணவில்லை என கணவர் புகார்

திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில் புதுப்பெண் காணாமல் போனதாக கணவர் காவல்நிலையத்தில் புகார்;

Update: 2022-09-09 07:45 GMT

பைல் படம்

திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் காணாமல் போனதாக  கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் கடந்த 8 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள உறவினரைப் பார்த்து வருவதாக கூறிச்சென்ற தேவி, பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன மனைவியை, கணேஷ்பாபு பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து கணேஷ்பாபு, வீரசோழன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து, காணாமல் போன புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News