விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

Former CM Jayalalitha Birth Day காரியாபட்டியில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களுக்க அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2024-02-25 09:05 GMT

காரியாபட்டியில்ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிர்வாகிகள்.

Former CM Jayalalitha Birth Day

தமிழகத்தில்  அதிமுக நிறுவனர்  எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுவைக் கட்டிக் காத்து  ஆட்சியிலும் அமர வைத்த பெருமை முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவைச் சாரும். அந்த வகையில்  கடந்த  2011  மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர வைத்தார். பின்  2016 ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய பிறந்த நாள் மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி. மேற்கு, கிழக்கு மேற்கு ஒன்றிய கழக அதிமுக சார்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே. சிவசாமி, மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெய பெருமாள், பொதுக் குழு உறுப்பினர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நகரச் செயலாளர் விஜயன், நகர துணைச் செயலாளர் வெங்கட் ராமன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆவியூர் ரவி, வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிர மணியம், பிரதிநிதி பழனியப்பன், தோப்பூர் ரகு, உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News