பணியின்போது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
விருதுநகர் மாவட்டத்தில் பணியிலிருந்தபோது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது;
2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தவர்கள் ஏற்படுத்தியுள்ள காக்கி உதவும் கரங்கள் என்ற அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.24 லட்சத்தை மாவட்ட எஸ்பி மனோகரன் வழங்கினார்
திருவில்லிபுத்தூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு, 24 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவர் கடந்த 29.11.2021ல் பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். 2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தவர்கள் ஏற்படுத்தியுள்ள காக்கி உதவும் கரங்கள் என்ற அமைப்பின் மூலம், பணியின்போது உயிரிழந்த காவலர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு நிதி திரட்டப்பட்டது. திரட்டப்பட்ட 24 லட்சம் நிதியை காசோலையாக, முத்துக்குமாரின் மனைவி மற்றும் பெற்றோரிடம், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வழங்கினார்.