விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்

Update: 2022-05-24 05:00 GMT

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை  திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்  போலீஸார் தாக்கல் செய்தனர்.

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில், விருதுநகரைச் சேர்ந்த ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜுனத் அகமது ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் கைதான நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக அரசின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை டிஎஸ்பி வினோதினி தலைமையில் போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணை துவங்கி 60 நாட்கள் ஆன நிலையில், இந்த வழக்கின் 806 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை, ஒரு இரும்பு பெட்டியில் எடுத்துவந்து திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் போலீசார் தாக்கல் செய்தனர்.

கைதான 4 மாணவர்களில், 15 வயது சிறுவன் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் தெரிவிக்காததால், அந்த சிறுவன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். புகார் கூறப்பட்ட மற்ற 3 பள்ளி மாணவர்கள் மீதும் 16 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். விருதுநகர் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் நடைபெறும் இந்த வழக்கில், திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதே குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி ஆய்வாளர் குமரேசன் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு குறித்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், இதர ஆவணங்கள் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 84 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 102 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.

Tags:    

Similar News