மர அறுக்கும் ஆலையில் தீ விபத்து: காவலாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு

திருவில்லிபுத்தூர் மரம் அறுக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்த்தில் தீயை அணைக்க முயன்ற காவலாளி மூச்சுத்திணறி உயிரிழந்தார்;

Update: 2023-11-25 12:32 GMT

மர அறுக்கும் ஆலையில் தீ விபத்து.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், அய்யம்பட்டி தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (60). இவர் அதே பகுதியில் உள்ள மரம் அறுக்கும் மில்லில், இரவு நேரக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை நேரத்தில், மில்லில் அறுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மரக்குவியலில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை பார்த்த பெரியகருப்பன், தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். தீ விபத்து

குறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயை அணைக்கும் போது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பெரியகருப்பன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News