பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை

பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2022-06-23 08:28 GMT

விருதுநகர் யூனியன் அலுவலகம் அருகே கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் பாலமுருகராஜா (41). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பாலமுருகராஜா மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி பூரணஜெயஆனந்த், வியாபாரி பாலமுருகராஜாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News