வத்திராயிருப்பில் கோடைகால நெல் அறுவடை பணிகள் விறுவிறுப்பு
திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதிகளில் கோடைகால நெல் அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதிகளில் கோடைகால நெல் அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூமாப்பட்டி, கான்சாபுரம், சுந்தரபாண்டியம், மகாராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடைகால நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக தென்காசி பகுதியில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தப்பகுதி விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு பருவமழை மிக நன்றாக பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடைகால நெல் விளைச்சல் நன்றாக உள்ளது. தற்போது சில நாட்களுக்கு முன்பு வரை அவ்வப்போது மழை பெய்ததாலும் கோடைகால நெல் சாகுபடி நன்றாக இருக்கின்றது என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.