காரியாபட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா
விருதுநகர் அருகே வில்லி பத்திரியில் இளைஞர் மன்றம் அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன
விருதுநகர் அருகே வில்லி பத்திரியில் இளைஞர் மன்றம் அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி:
வில்லி பத்திரி இளைஞர் நற்பணி மன்றம், சிலம்பம் அகாடமி மற்றும் விருதுநகர் ஆலமரம் அமைப்பு சார்பாக வில்லி பத்திரி ராஜா ஊரணியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலமரம் அமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார்.
இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில், ஊரணியில் கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில், கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், மனித பாதுகாப்பு கழக மாவட்ட த்தலைவர் முனியசாமி, செயலாளர் பிரின்ஸ் ஆலமரம் அமைப்பு இணைச் செயலாளர் எட்வர்டு துணை செயலாளர் பாண்டி பொருளாளர் வேல்ச்சாமி, நிர்வாகிகள் .ஜெயக்குமார், பரமசிவம் கண்ணன் வினோத்குமார் பொன்பாண்டி . சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.