காலனி வீடுகளை பராமரிக்க நிதியுதவி வழங்கிய அமைச்சர்

காலனி வீடுகள் பராமரிப்பு செய்வதற்காக பயனாளிகளுக்கு நிதி உதவியை ,அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்;

Update: 2023-05-05 11:30 GMT

மல்லாங்கிணர் பேரூராட்சியில், காலனி வீடுகள் பராமரிப்புக்கு 10 லட்சம் நிதி உதவி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சியில், காலனி வீடுகள் பராமரிப்புக்கு 10 லட்சம் நிதி உதவி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

மல்லாங்கிணரில், காலனி வீடுகள் பராமரிப்பு செய்வதற்காக பயனாளிகளுக்கு நிதி உதவியை ,அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், மல்லாங்கிணறு பேரூராட்சியில், குடியிருக்கும் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருக்கும் காலனி வீடுகளை நீண்ட நாட்ககளாக பழுதடைந்து காணப்பட்டது.

காலனி வீடுகளை பராமரிப்பு செய்ய, அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் ,திருச்சுழி தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா20 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி மல்லாங்கிணறில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் , தொழில், அமைச்சர் தங்கம் தென்னரசு, 20 பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கினார். மல்லாங்கிணர் பேரூராட்சித்தலைவர் துளசிதாஸ் , காரியாபட்டி பேரூராட்சித் தலைவர்செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர், துணைத்தலைவர் மிக்கேல் அம்மாள் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News