தூய்மை பணியாளருக்கு நிலுவையில் உள்ள நிவாரணை நிதியை வழங்க வேண்டும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கொரோனா ரைவால் பாதிக்கப்பட்டு ஓராண்டாகியும் அரசு அறிவித்த நிவாரண உதவி 2 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளர் குற்றச்சாட்டு.;

Update: 2021-04-30 00:45 GMT

தமிழகத்தில் குரானா இரண்டாவது 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதில் மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என பலர் பேர் தீவிர பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு குரானா முதல் அலையை தடுக்க உதவிய தூய்மை பணியாளர்களை மத்திய அரசு கௌரவித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பை சேர்ந்த மூர்த்தி என்ற தூய்மை பணியாளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடன்வாங்கி நான்கு லட்சம் வரை செலவு செய்த தூய்மை பணியாளர் மூர்த்திக்கு நிவாரணமா 2 லட்சம் வழங்க வேண்டிய நிவாரணத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை எனவும், உடனே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மை பணியாளர் மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News