ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தப்பியோடிய இரண்டு கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;
விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கூமாப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், அருண்குமார். இருவரும் பட்டாக்கத்தி வைத்து அச்சுறுத்தியதாக புகாரில், கூமாபட்டி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அருப்புக்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் கைதிகள் இருவரும், கிருஷ்ணன்கோவில் பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.