திருவில்லிப்புத்தூரில் கல்லூரி மாணவி மாயம்

திருவில்லிப்புத்தூர் அருகே, காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2022-10-01 15:47 GMT

கல்லுாரி மாணவி மாயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள குப்பைச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவருடைய 23 வயது பெண் இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் மாணவி. இந்நிலையில், கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக சென்ற ரேணுகா, பின்னர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு தேர்வு எழுதச்சென்ற தனது மகளை, பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அப்பெண்ணின் தாயார், கிருஷ்ணன்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து விசாரிக்கின்றனர்.

Similar News