காரியாபட்டியில் தீவிர துப்புரவு பணி முகாம்

காரியாபட்டியில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்பரவு பணி முகாமை பேரூராட்சித்தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

Update: 2022-05-01 12:11 GMT

காரியாபட்டியில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்பரவு பணி முகாமை பேரூராட்சித் தலைவர்செந்தில் தொடங்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்பேரில், பேரூராட்சியில் துப்புரவு பணிகள். தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, காரியாபட்டி பேருராட்சியில், ஒருங்கிணைந்த சிறப்பு தூய்மை முகாம்.துவக்க நிகழ்ச்சி, சக்தி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தூய்மை பணி முகாமினை தொடங்கி வைத்தார்.செயல் அலுவலர் ரவிக்குமார்,மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து, பேருராட்சி  தலைவர்  செந்தில் கூறியதாவது. காரியாபட்டி பேரூராட்சியில்  புதிதாக நிர்வாகத்தில் பொறுப்பேற்றவுடன் நகர் பகுதியில் குப்பைகள்., பிளாஸ்டிக்கழிவுகள் தேங்காம இருக்க உடனுக்குடன் தூய்மை மணிகளை தீவிரமாக செய்து வருகிறோம். வீடுகளில் குப்பைகள் சேகரிக்க செல்லும் பணியாளர்களுக்கு கால அட்டவனை போடப்பட்டு முறைபடுத்தி வருகிறோம். தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பாக பணி செய்வதற்கு தேவையான உபகரணங்கள் புத்தாக கொடுக்கப்பட்டுள்ளது..பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்த குப்பை அள்ளும் டிராக்டர் வண்டிகள் பராமரிப்பு செய்யப்பட்டது.

Tags:    

Similar News