திருவில்லிபுத்தூர் அருகே தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரி
திருவில்லிபுத்தூரில் சாலை தடுப்பு சுவரில் மோதிய லாரி விபத்துக்குள்ளாதால் லேசான போக்குவரத்து பாதிக்கப்பட்டது;
திருவில்லிபுத்தூரில் சாலை தடுப்பு சுவரில் மோதிய லாரி விபத்துக்குள்ளாதால் லேசான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் சாலை தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. ராஜபாளையத்தில் இருந்து செங்கல் ஏற்றிவந்த லாரி ஒன்று, மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சந்திப்பில் வந்துகொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தப்பகுதியில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்து மீட்பு வாகனத்தை வரவழைத்து தடுப்பு சுவரில் மோதிய லாரியை மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.