திருவில்லிபுத்தூர் அருகே நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது

Four arrested in murder case near Srivilliputhur;

Update: 2022-07-01 13:30 GMT

திருவில்லிபுத்தூர் வாலிபர் தற்கொலை வழக்கில் திருப்பம்.கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்த 4 பேர் கைது.

திருவில்லிபுத்தூர் வாலிபர் தற்கொலை வழக்கில் திருப்பம்.கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்த 4 பேர் கைது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் காளிராஜன் (28). கடந்த 2019ம் ஆண்டு, திருவில்லிபுத்தூர் எண்ணெய் காப்பு மண்டபத்தில், இறந்த நிலையில் காளிராஜனின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை செய்தனர். திடுக்கிடும் வகையில், ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக காளிராஜன் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராமசாமி (54), பனையூரைச் சேர்ந்த ஆறுதல்ராஜா (38), மம்சாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (37), ராஜபாளையத்தைச் சேர்ந்த அழகர் (47) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News