ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கூட்டணி அமாேக வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.;

Update: 2022-02-22 13:18 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மல்லிகா சான்றிதழ்களை வழங்கினார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் கடந்த 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிலையில் W. புதுப்பட்டி பேரூராட்சியின் தபால் வாக்குகள் போடப்பட்ட பெட்டியின் சாவி தொலைந்து போனதால் பூட்டு உடைக்கப்பட்டு தபால் ஓட்டு எண்ணப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் 27 வார்டுகளில் திமுக கூட்டணியும் 5 ல் அதிமுகவும், ஒன்றில் சுயேட்சையும் வெற்றி பெற்றது.

5 பேரூராட்சிகளுக்கான வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், கொடிக்குளம், வ.புதுப்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட ஐந்திலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அவனை எடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மல்லிகா சான்றிதழ்களை வழங்கினார். வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுக வாக்கெடுப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் மற்றும் 5 பேரூராட்சிகளின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News