சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ,பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன

Update: 2022-04-29 08:30 GMT

விருதுநகர் அருகேயுள்ள சதுரகிரிமலையில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சதுரகிரியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு, பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, வியாழக்கிழமை முதல் மே 1-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள், காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏறி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ,பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்கிடையில், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், மழை பெய்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News