நகர்ப்புற தேர்தலில் வாக்குப்பதிவு குறைவு ஏன்?- காங்கிரஸ் எம்.பி. பேட்டி

நகர்ப்புற தேர்தலில் வாக்குப்பதிவு குறைவு ஏன்?- என்பதற்கான காரணத்தை காங்கிரஸ் எம்.பி. பேட்டி அளித்தார்.

Update: 2022-02-21 03:04 GMT

மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி அளித்தார்.

சிவகாசியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதியில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது மக்களின் பங்களிப்பு குறைந்துள்ளதை காட்டுகிறது

மக்களாட்சியின் முக்கிய தூணாக உள்ள உள்ளாட்சியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்காதது தங்களது பிரச்சனைகளை உள்ளாட்சி மூலம் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை சீர்குலைக்கும் விதமாக உள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. பண பலத்தையும் மத்திய அரசின் அரசியல் பலத்தையும் நம்பி போட்டியிட்டுள்ளது.பா.ஜ.க. மிகப்பெரிய பண பலத்துடன் தமிழக அரசியலுக்குள் வர துடிப்பது தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு சவாலாக அமையும்

கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் பா.ஜ.க. அரசியல் செய்கிறது.கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்லிக்கொண்டு வருகிறார்

ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்வதை பிரதமர் மோடியே நிறுத்தி விட்டார், தேர்தல் செலவினத்தை குறைக்கவே பிரதமர் இதனை தெரிவித்தார் சட்டமன்றம் முடக்கப்படும் என்பது அரசியல் சாசனம் தெரியாதவர்கள் பேசும் பேச்சு. கட்சியினரை உத்வேகப்படுத்த சட்டமன்றத்தை முடக்க ஆதரவு கொடுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

சட்டமன்றத்தை முடக்குவது என்பது அதிகாரத்தை மீறி செய்யும் அடாவடி செயல்.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த கட்சியில் இருந்து கொண்டு ஆர்.எஸ். எஸ் காரர் போல் சட்டமன்றம் முடக்கப்படும் என பேசுவது சிறுபிள்ளைதனமாக இருக்கிறது

2026ல் மதுரை எய்ம்ஸ் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு சொல்கிறது ஆனால் ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் இதுவரை முழுமையான உத்தரவாதம் தரவில்லை

எய்ம்ஸ் எப்பொழுது அமையும் என்பதை பாரத பிரதமரிடம் கேட்பதை தவிர்த்துவிட்டு இனிமேல் ஜப்பான் பிரதமரிடம் கேட்க வேண்டும் தமிழகத்தை மத்திய அரசு 2ம் தரமாக பார்ப்பதற்கு எய்ம்ஸ் ஒரு எடுத்துக்காட்டு

கோரக்பூர், ராஜ்கோட், அசாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கியுள்ள நிலையில் மதுரை எய்ம்சிற்கு மட்டும் ஜப்பானுடன் நிதி கோரியுள்ளது தமிழகத்தை வேறுபடுத்தி காட்டும் விதமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News