சிவகாசி கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது
சிவகாசியில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது.
சிவகாசி பாரதி நகரை சேர்ந்த சமையல் தொழிலாளியான சேகர் 60. இவருடன் விக்னேஷ்குமார் மற்றும் அவரது உறவினர் தமிழ்செல்வன் ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 20ம் தேதி சிவகாசி பேருந்து நிலையம் அருகே பில்லக்குழி மயானத்தில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ்குமார், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் பீர் பாட்டிலால் சேகரை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் சாத்துாரில் 2020ல் நடந்த கொலை வழக்கில் விக்னேஷ்குமார் சிறை சென்று ஜாமினில் வந்தவர் என்பது தெரியவந்தது.