நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை தெற்கு ரயில்வே மீண்டும் இயக்க கோரிக்கை

கொரானா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-07 01:30 GMT

கோப்பு படம்

நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்த போது,  ஊரடங்கு அமல்படுத்தப்படது. அத்த்டுடன், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.  அரசின் நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பொது போக்குவரத்தும் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. எனினும், ரயில் சேவைகள் முழுமையாக திறந்துவிடப்படவில்லை.
இதனால்,  நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள்,  மதுரைக்கு சென்று வர,  அரசு மற்றும் தனியார் பஸ்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவும் பயண  நேரம் அதிகரிப்பும் உண்டாகிறது. எனவே, பயணிகள் ரயில் சேவையை மீண்டும் பழையபடி இயக்க வேண்டும் என்று, தெற்கு ரயில்வே நிர்வாகத்தை பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News