கொரோனோ ஊரடங்கு விதிமுறையை காற்றில் பறக்கவிடும் சிவகாசி மக்கள்
கொரோனா ஊரடங்கை சிவகாசி மக்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இவர்களை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.;
தமிழகம் முழுவதும் கொரோனோ 2வது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் விற்பனை கடைகளும் விதியை மீறி திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் கொரோனோ அச்சமின்றி கூடியுள்ளதால் கொரோனோ பரவல் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.