சிவகாசி அருகே அலுமினிய பவுடர் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

அலுமினியம் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு சினையாக இருந்த பசு ஒன்று பலியானது.

Update: 2021-04-04 05:40 GMT

file image

சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனைகுட்டம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட அலுமினிய பவுடர் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அதே பகுதியில் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளுக்கு செலுத்தக்கூடிய மூலப்பொருளான அலுமினிய பவுடர் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். இன்று தொழிலாளர்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அருகில் மாட்டுத்தொழுவத்தில்  சினையாக இருந்த  மாடு பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.

மேலும் இந்த தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மணலை கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து வெம்பகோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் இந்த கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News