சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
கொரோனோ 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஆக்சிஜன் தேவையுடன் வருவதால் ஆக்சிஜன் படுக்கைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கை உள்ள நிலையில் 30 படுக்கைகளும் நிரம்பியதால் சிகிச்சை பெற வருபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் விருதுநகர் மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதனால் சிகிச்சை பெற வருவோர்கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இங்கு 1 டன் திரவ நிலை ஆக்சிஜன் சேமித்து வைக்கும் ஆக்சிஜன் டேங்க் உள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நிரப்பப்படாமல் உள்ளதகவும் முறையாக நிறப்பினால் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
#instanews #tamilnadu #Sivakasi #Government #Patients #lack #oxygen #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #சிவகாசி.அரசு மருத்துவமனையில் #ஆக்சிஜன் #பற்றாக்குறையால் #நோயாளிகள் #அவதி #hospital #suffering #CoronaFund #coronavirus #CoronaSpread #Covid2ndWave #covid #staysafe #stayhome