சிவகாசியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

சிவகாசியில் கிராவல் மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-08-06 17:30 GMT

சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கங்காகுளம் எஸ்.என்.புரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தினார். இந்தநிலையில் அந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து சோதனை செய்து பார்த்த போது டிராக்டரில் உரிய அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த டிராக்டரை திருத்தங்கல் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News