தீபாவளிக்கு ரூ.4300 கோடி பட்டாசு வர்த்தகம்: உற்பத்தியாளர் சங்க தலைவர்

இந்தியாவின் 90 % பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 % குறைவாகவே நடந்துள்ளது.

Update: 2021-11-06 22:30 GMT

சிவகாசி பட்டாசு 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 4300 கோடி ரூபாய் வரை பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து  பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் கணேசன் பஞ்சுராஜன் கூறியுள்ளதாவது :-

இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைவாகவே நடந்துள்ளது. 70சதவீத பட்டாசு உற்பத்தி மட்டுமே நடைபெற்றுள்ளது.  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசு நாடு முழுவதும் சுமார் ரூ. 4300 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

வழக்கமாக ஆண்டுதோறும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும்.ஆனால்,  கொரோனோ பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து 2வது ஆண்டாக பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு  4300 கோடி ரூபாய் அளவிலான பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.  அடுத்த ஆண்டு முழுமையான வர்த்தகம் நடைபெறும் நம்பிக்கையுடன்  உற்பத்தி பணியை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News