சிவகாசி சுற்றுப்பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை
சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில், சுற்றுப்பகுதிகளிலும் சிவகாசியிலும், லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர், மழை வலுத்தது. பலத்த இடியுடன் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது.
சிவகாசி நகர பகுதியில் மழை பெய்யவில்லை. மாறாக, சுற்றி உள்ள கிராமப்பகுதியில் மழை நீடித்தது. குறிப்பாக, வேண்டுராயபுரம், சாமி நத்தம் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், மேற்கூரை சரிந்து விழுந்து விழுந்து. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.