சிவகாசியில் உற்பத்தி பாதிப்பு: பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை
சிவகாசியில் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கும் பட்டாசு ஆலைகள். உற்பத்தி பாதிக்கப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை
கொரோனோ 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியை சுற்றியுள்ள 1100 பட்டாசு ஆலைகள், தற்போது 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கொரோனோ பாதிப்பின் காரணமாக விற்பனை மந்தம், உற்பத்தி பாதிப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் பட்டாசு தொழிலுக்கு தற்போது 50 சதவீத தொழிலாளர்களுடன் உற்பத்தி பணி மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
எனவே தமிழக அரசு பட்டாசு தொழிலுக்கு தளர்வு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.