பள்ளியில் 39 லட்சம் ரூபாய் கையாடல் செய்த காசாளர் கைது

திருத்தங்கல் தனியார் மெட்ரிக் பள்ளியில் 39 லட்சம் ரூபாய் கையாடல் செய்த காசாளர், கணக்காளரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2021-04-15 06:25 GMT

திருத்தங்கலில் தனியார் மெட்ரிக் பள்ளியில் சிவகாசியை சேர்ந்த பானுமதி 36, காசாளராகவும் சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டை சேர்ந்த செல்வக்குமார் 45, கணக்காளராகவும் பணிபுரிந்தனர். இருவரும் கூட்டு சேர்ந்து 2018 முதல் 2020 வரை கல்வி கட்டணத்தில் முறைகேடு செய்து ரூ.39 லட்சத்து 46 ஆயிரத்து 435 கையாடல் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மாவட்ட குற்ற பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News