சிவகாசியில் கண்மாயில் கழிவுகளை கொட்டிய நபருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள சிறுகுளம் கண்மாயில் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ஆட்டோவில் வந்த நபர் அதில் கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகளை கண்மாயில் கொட்டினார்கள்.இதனை கண்ட சுகாதார துறை அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டிய நபருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடுமையாக எச்சரித்தனர். மேலும் இதுபோன்று கண்மாயில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.