சிவகாசியில் மதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு
சிவகாசி மாநகராட்சியில் மதிமுக தேர்தல் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.;
சிவகாசி மாநகராட்சி மதிமுக தேர்தல் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக முதன் முதலாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இந்த மாநகராட்சி 48 வார்டுகளை கொண்டது. சிவகாசி மாநகராட்சியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சி மதிமுக சார்பில் சீனிவாசராகவன்(எ ) ராஜேஷ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மதிமுக தேர்தல் அலுவலகத்தை சாத்தூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் திறந்து வைத்தனர். மேலும் தேர்தல் அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த திமுக கூட்டணி கட்சியினர் சீனிவாசராகவன்(எ ) ராஜேஷிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.