சிவகாசி மாநகராட்சியில் அமமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல்
சிவகாசி மாநகராட்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.;
சிவகாசி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர் தலைமையில் வேட்புமனு செய்தனர்.
விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் 1.2.3.7.8.9.11.16.20.22.23.25.26.27.29.33.38.43. ஆகிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி அலுவலத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ் குமார் தலைமையில் தங்கள் விருப்ப மனுக்களை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார்கள். இந்நிகழ்சியில் ஏராளமான அமமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.