சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.
பொதுமுடக்கத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா.
சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி கோவில் உள் பிரகரத்திற்குள் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இந்நிலையில் வழக்கமாக விழாவின் முக்கிய நிகழ்வாக இன்றைய தினம் காவடி எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், கயிறு குத்துதல், பறவை காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். ஆனால் பொதுமுடக்கம் என்பதால் நேர்த்திக்கடன் எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எந்தவித கொரோனோ வழிமுறைகளையும் தனிமனித இடைவெளி இல்லாமல் கூடியது, கொரோனோ பரவலை மேலும் அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.