கொரோனோ பொதுமுடக்க அச்சம்:அச்சக உரிமையாளர் தற்கொலை

கொரோனா பொதுமுடக்க அச்சத்தில் அச்சக உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2021-05-09 03:37 GMT

அச்சக இயந்திரம்

விருதுநகர் மாவட்டம் சிவகங்கை, ராஜபாளையம் அடுத்த சேத்தூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு வயது 63. இவர் சிவகாசி அடுத்த சாட்சியாபுரத்தில் சொந்தமாக அச்சகம் நடத்தி வந்துள்ளார். கொரோனோ பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக செயல்படாதததால் அதன் மூலம் கிடைக்கும் ஆர்டர்கள் சரிவர கிடைக்காததால் தொழில் நலிவடைந்து செலுத்த வேண்டிய வங்கி கடனையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சேத்துாரில் உள்ள வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News