பட்டாசு தொழில் விவரம் தெரியாமல் சிபிஐ வழக்கு நடத்துகிறது: எம்பி மாணிக்கம் தாகூர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது துறை மூலம் பட்டாசு பட்டாசு தொழிலுக்கு துரோகம் இழைத்து வருகிறார்

Update: 2021-10-04 16:20 GMT

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர்

பட்டாசு தொழில் விவகாரத்தில் சிபிஐ முழுமையாக விவரங்கள் தெரிவிக்காமல் தெரியாமலும் வழக்காடி கொண்டிருக்கிறார்கள் என்றார் விருதுநகர் மாணிக்கம் தாகூர்.

விருதுநகர் மாவட்டம்,  சிவகாசியில் இஎஸ்ஐ மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் தொடர்பாக  ஆய்வு மேற் கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:பட்டாசு தொழில் விவகாரத்தில் சிபிஐ முழுமையாக விவரங்கள் தெரிவிக்காமல் தெரியாமலும் வழக்காடி கொண்டிருக்கிறார்கள்.பட்டாசுக்கு எதிராக ஒரு சில கும்பல்கள் வேலை செய்வதன் எதிரொலியாக தான் இந்த தடைகள் என்பது தொடர்கிறது.  பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ள ராஜஸ்தான் மாநில முதலமைச்சரை சந்திக்க நேரம் கோரியுள்ளோம். விரைவில் சந்திப்போம் . தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பட்டாசு தொழில் குறித்து புரிதல் இல்லாமல் இருக்கிறார். துணை முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளோம்.

தில்லியில் பட்டாசு தடை விதித்தால் மாசு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற பொய்யான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.உண்மையை அவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாது. எனவே இந்த ஆண்டு தில்லியில் காற்று மாசு என்பது அதிகமாக காணப்படும். மீண்டும் பல்வேறு பகுதிகளில் சீன பட்டாசு ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த  கடுமையாக நடவடிக்கை எடுக்கப்போவதாக வீரவசனம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  தனது கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறை மூலம் பட்டாசு பட்டாசு தொழிலுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்து வருகிறார். இதைத் தடுக்க கடிதம் எழுத உள்ளேன்.  சீனப் பட்டாசு வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பொய்ப் பிரச்சாரத்தில் மட்டுமே  மத்திய அரசு ஈடுபட்டது என்றார் மாணிக்கம்தாகூர்.

Tags:    

Similar News