தாய்ப்பால் வார தினம்-சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற மினி மராத்தான்

விருதுநகர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் தின வாரத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Update: 2021-08-04 03:42 GMT

விருதுநகர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் தின வாரத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி சிவகாசியில் மினிமாரத்தான் போட்டிக்கு இந்திய மருத்துவ குழந்தைகள் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏ.வி.டி. பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மினிமாரத்தான் போட்டியை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 85 வயது ராஜேந்திரன், பெண்கள் பிரிவில் 84 வயது செந்தியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் மாரிமுத்து, வேல்முத்து, கமலேஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

பெண்கள் பிரிவில் செல்வகுமாரி வினாயகமூர்த்தி, மகேஸ்வரி, நிவேத்தா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 4-ம் வகுப்பு மாணவி அகிலேஷ்வரிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News