ஊரடங்கு: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடல்
ஊரடங்கு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டது;
விருதுநகர் மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டாசு தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர் . இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கொரோனோ வைரஸ் தொற்று மக்களிடையே 2வது அதிவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. பட்டாசு உற்பத்தியை மேற்கொண்டால் தொழிலாளர்களுடைய கொரோனோ தொற்று பரவும் அச்சம் நிலவுவதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1100 பட்டாசு ஆலைகளையும் மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டு இன்று முதல் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின்னர் பட்டாசு உற்பத்தி தொடங்கப்படும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்