சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மாயம்

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மாயமாகி உள்ளனர்.

Update: 2022-02-28 04:21 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் மாநகராட்சி தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் திமுக கட்சி தனிப்பெரும்பான்மையாக 25 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்கட்சியான அதிமுக கட்சி வேட்பாளர்கள் 11 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். அதிலும் திருத்தங்கல் பகுதியில் மட்டுமே 10 வார்டுகளில், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற முடிந்தது. சிவகாசி பகுதியி்ல் ஓரே ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வேட்பாளரால் வெற்றி பெற முடிந்தது. அதிமுக கட்சியின் சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல் இருவரும் தோல்வியடைந்தனர். இதனால் அதிமுக கட்சியினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அதிமுக கட்சியில் வெற்றி பெற்ற 9 கவுன்சிலர்கள், நேற்று இரவு முதல் திடீரென்று மாயமானார்கள். அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரும், நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாநகராட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த அதிமுக கட்சி தொண்டர்கள், அதிமுக கவுன்சிலர்கள் கட்சி மாறப்போவதாக வரும் தகவல்களால் மிகவும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் இருந்து வருகின்றனர்.

Tags:    

Similar News