ஆக்சிஜன் தட்டுப்பாடு - அடுத்த சில நாட்களில் சரியாகும் - அமைச்சர்.

சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன்.;

Update: 2021-05-15 07:32 GMT

தமிழகம் முழுவதும் 2 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் தமிழக அரசின் கொரானா சிறப்பு நிவாரண தொகை வழங்கும் திட்டத்தினை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.தமிழகம் முழுவதும் 2 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும்.ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இரண்டு நாட்களில் சரியாகிவிடும்

சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் வர உள்ளது.தொழில் துறை சுகாதாரத் துறையும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்

Tags:    

Similar News