தடுப்பூசி போட தனிமனித இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்:நோய்த் தொற்று பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போட தனிமனித இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள் - நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Update: 2021-07-05 14:45 GMT

சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போட வந்த மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நின்றதால் கொரானா தொற்று பரவும் நிலை ஏற்பட்டது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போட தனிமனித இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்; நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரானா நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் அரசு முகக் கவசம் அணிவது தடுப்பூசி போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது - மாநிலம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது நிலவி வருகிறது.

இந்நிலையில் சிவகாசி நகராட்சியில் நான்கு நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பால் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். தனிமனித இடைவெளி இன்றி ஆண்கள் பெண்கள் என திரண்டதால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பின்னர் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது அதிகாரிகள் முறையாக தடுப்பூசி முகாம் குறித்து எதுவும் தெரிவிப்பதில்லை எனவும் இதனால் பெரும்பாலானோர் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News