சிவகாசி அருகே ஊருணி தூர்வார பூமி பூஜை

சிவகாசி அருகே ரூ.61 லட்சம் ரூபாய் செலவில் ஊருணி தூர்வாரும் பணி சிறுவர் பூங்கா, நடைமேடை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது

Update: 2022-10-02 14:00 GMT

பூமி பூஜையில்  பங்கேற்ற மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்

சிவகாசி அருகே ரூ.61 லட்சம் ரூபாய் செலவில் ஊருணி தூர்வாரும் பணி சிறுவர் பூங்கா, நடைமேடை அமைக்க பூமிபூஜை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் செல்லியாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகேயுள்ள ஊருணி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போன நிலையில் உள்ளது. இந்த ஊருணியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று, இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், ஊருணியை தூர்வாருவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செல்லியாரம்மன் ஊருணியை தூர்வாரி, அந்தப் பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் ஊருணியை சுற்றி நடைமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டது. சுமார் 61 லட்சம் ரூபாய் செலவில் ஊருணி தூர்வாரும் பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் அழகுமயில் பொன்சக்திவேல், குருசாமி மற்றும் மாமன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News