இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் தை வெள்ளி வழிபாடு: திரண்ட பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது

Update: 2023-02-11 08:30 GMT

இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தை மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள்.  தை மாதாந்திர வெள்ளி கிழமையை முன்னிட்டு, ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய இருக்கன்குடி மாரியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து ஏராளமான அம்மன் பக்தர்கள், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர்.

மேலும் சிவகாசி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளிலிருந்து இருக்கன்குடிக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தை மாதாந்திர வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய இருக்கன்குடி மாரியம்மனை பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலின் சிறப்புகள்..

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.  சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு உள்ள சாலைவசதி சிறப்பாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் இத்தலத்தை மிக எளிதாக சென்று அடையலாம். 

சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு வைப்பாறு, அர்ச்சனா நதியில் புனித நீராடிய பிறகே அம்மனை தரிசித்தனர். தற்போது அணை கட்டப்பட்டு விட்டதால் ஆண்டில் 90 சதவீதம் நாட்கள் இரு நதிகளிலும் தண்ணீர் ஓடுவது இல்லை. எனவே பக்தர்கள் குறை தீர்க்க நதிகளில் சிறுசிறு குடிசைகள் அமைத்து பம்ப்-செட் வைத்துள்ளனர். கட்டணம் செலுத்தி குளித்துவிட்டு அம்மனை தரிசிக்கலாம்..

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எனவே பூஜைப் பெரிருட்கள் வெளியில் இருந்து வாங்கி வர வேண்டியதில்லை. 5. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கருவறை இப்போதும் அப்படியே உள்ளது.  கருவறையில் உள்ள பராசக்தி மாரியம்மன் சிலையை சதுரகிரி சித்தர் சிவயோக ஞான சித்தர் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.  இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது. அருள் பார்வை நிறைந்தது. அவள் முகத்தை எத்தனை மணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தாலும் பக்தர்கள் மனதில் சலிப்பே வராது..

பூசாரி தீபாராதனை காட்டும் போது மாரியம்மன் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் அவள் கருணை பொங்க நம்மை பார்ப்பது போல உணரமுடியும்.கோவிலை சுற்றி காது குத்த, மொட்டை போட, விடலை தேங்காய் எறிய, ஆடு, கோழி சுத்தி விடுவதற்கு என்று தனித்தனியே வசதியான இடங்கள் உள்ளன. பக்தர்கள் வசதிக்காக கோவிலை சுற்றி 26 இடங்களில், சிறு, சிறு மண்டபங்கள் உள்ளன.


Tags:    

Similar News