சிவகாசி அருகே மாணவர் வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை
சிவகாசி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தேடுகின்;
சிவகாசி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (45). இவரது மகன் முத்துக்குமார் (19). கல்லூரி மாணவரான முத்துக்குமார் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, சிவகாசியைச் சேர்ந்த பாண்டித்துரை, மாரி, ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் முத்துக்குமாரை சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றனர்.
இது குறித்து வைரமுத்து, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவர் முத்துக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விஸ்வநத்தம் அருகேயுள்ள தெற்கு ஆனைக்கூட்டம் பகுதியில் இருந்து, பேர்நாயக்கன்பட்டி செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், சடலமாக கிடந்தது காணாமல் போன கல்லூரி மாணவர் முத்துக்குமார் என்பது தெரிய வந்தது. முத்துக்குமார் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குறறவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.