சிவகாசி: சாலையோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

பேருந்தில் குறைவான பயணிகள் இருந்ததும், முன் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும் நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.;

Update: 2023-04-06 17:00 GMT

விபத்து ஏற்பட்ட பஸ் மற்றும் லாரி.

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரம் பகுதியில் இருந்து, சிவகாசிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை சாத்தூர் அருகேயுள்ள கோணம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (41) ஓட்டி வந்தார். சிவகாசி பேருந்து நிலையம் செல்லும் புறவழிச்சாலையில் பேருந்து சென்ற போது, திடீரென்று அரசு பேருந்தின் முன்பு ஒரு லாரி வந்தது. விபத்தை தவிர்ப்பதற்காக பேருந்து ஓட்டுநர் சட்டென்று பேருந்தை இடது பக்கமாக திருப்பியுள்ளார்.

அப்போது அங்கு சரக்கு இறக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது, அரசுப் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. மேலும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகேயிருந்த 2 இருக்கைகள் முற்றிலும் சேதமானது. பேருந்தில் குறைவான பயணிகள் இருந்ததும், முன் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும் நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டுநர் செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News