கண்மாய் நீர் வரத்து பாதை முள் செடிகளை அகற்றக் கோரிக்கை

சாத்தூர் அருகே கண்மாய் நீர்வரத்து பாதையில் முள் செடிகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2022-09-21 14:00 GMT

சாத்தூர் அருகே கண்மாய் நீர்வரத்து பாதை முட் செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூர் அருகே கண்மாய் நீர்வரத்து பாதை முட் செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது கோல்வார்பட்டி அணை. இந்த அணைக்கு அர்ச்சுனா நதியிலிருந்து தண்ணீர் வருகிறது.மேலும் ,இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு கோல்வார்பட்டி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் கோல்வார்பட்டி அணைக்கு தண்ணீர் வரும் அர்ச்சுனா நதி ஓடும் பாதைகளும், அணையிலிருந்து மேலமடை கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாதைகளும் முட் செடிகள் வளர்ந்து ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் , தண்ணீர் வரத்து மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கோல்வார்பட்டி அணை மற்றும் இந்தப்பகுதியில் உள்ள ஐந்து கண்மாய்கள் மூலம் சுமார் 4 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் பல ஆண்டுகளாக அணையின் நீர்வரத்து பாதை மற்றும் கண்மாய் நீர்வரத்து பாதைகள் அனைத்தும் முட் செடிகள் வளர்ந்து தண்ணீர் வரத்து மிகவும் பாதிக்கப்பட்டதால், இந்தப்பகுதியின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ,பருவமழை காலம் துவங்குவதற்கு முன்பாக நீர்வரத்து பாதையில் உள்ள முட் செடி ஆக்கிராமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இந்தப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News