ராஜபாளையம் மாயூரநாதசுவாமி ஆலய தேர் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Rajapalayam Mayuranatha Swamy Temple Festival

Update: 2022-07-03 15:00 GMT

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு மாயூரநாதர் சுவாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காயல்குடி ஆற்றுப் படுகையில் பெத்தவ நல்லூர் அருள்மிகு மாயூரநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அஞ்சல் நாயகி உடனுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஆனிப் பெரும் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கொடி ஏற்றத்துடன் துவங்கியது. காலையில் சிவாச்சாரியார்கள் அருள்மிகு நாயுருநாத சுவாமி, அஞ்சல் நாயகி அம்பாள் மற்றும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

பின்னர், கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி, விளைந்த நெற்கதிர்கள், தர்ப்பை புல் சுற்றி கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ச்சியாக, தினமும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு, தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடத்தப்பட்டு வரும் 11ஆம் தேதி திங்கட்கிழமை தேர் திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, சரண்கோவில் செயல் அலுவலர் தலைமையில் கோவில் ஊழியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News