விருதுநகரில் விஷம் குடித்து போலீஸ் தலைமைக் காவலர் தற்கொலை

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக தலைமைக்காவலர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2022-03-29 09:00 GMT

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராஜீவ்பாண்டி (38). இவர் தனது மனைவி நிர்மலாதேவி மற்றும் 2 குழந்தைகளுடன், ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இது குறித்து நிர்மலாதேவி பரமக்குடியில் வசித்து வரும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.  நேற்று நிர்மலாதேவியின் பெற்றோர் விருதுநகருக்கு வந்து ராஜீவ்பாண்டி மீது, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட ராஜீவ்பாண்டி மீது, சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், ராஜீவ்பாண்டியை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தலைமை காவலர் ராஜீவ்பாண்டி, வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து மயங்கி விழுந்தார். அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ராஜீவ்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூலக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News