காரியாபட்டியில், தேசிய இளைஞர்கள் தினம்
காரியாபட்டியில், தேசிய இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
காரியாபட்டியில் இளைஞர்கள் தின விழா
காரியாபடி, ஜன:21
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாரத ஸ்டேட் வங்கி கிராம சேவா திட்டம், மற்றும் டான் பவுண்டேசன் சார்பில் இளைஞர் தினம் தொட்டியங்குளத்தில் நடைபெற்றது. இளைஞர் தின விழாவுக்கு, ஊராட்சி மன்றத்
தலைவர் ஆதி ஈஸ் வரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் , இளைஞர்கள் மற்றும் மாணவர் களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்து வதற்காக நூலகம் திறந்து வைக்கப் பட்டது. தனித்திறன் மேம்பாடு, தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு , உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் உடற்கல்வி, விளையாட்டு, யோகா , போன்ற பயிற்சிகள் குறித்து கருத்துரைகள் வழங்கப் பட்டது . இளைஞர் சேவை மையத்தில், இளைஞர் களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள்
வழங்கப் பட்டன. டான் நிறுவன அணித் தலைவர் . பிரகலாதன், இளைஞர் நல ஒருங்கிணைப் பாளர் செங்குட்டு வேல், உடற்பயிற்சி இயக்குநர் சுந்தரேசன் மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.