சாத்தூரில் கூடாரவல்லி நகர சங்கீர்த்தன விழா
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சடையம்பட்டி பகுதியில் பிரசித்திபெற்ற ராதாகிருஷ்ணன் கோயில் உள்ளது.
சாத்தூர் அருகே கூடாவல்லி நகர சங்கீர்த்தன விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சடையம்பட்டி பகுதியில் பிரசித்திபெற்ற ராதாகிருஷ்ணன் கோயில் உள்ளது. மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த தினத்தில், நாகர சங்கீர்த்தன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, ராதாகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, சீனிவாசன் குழுவினரின் ராமகிருஷ்ண கீர்த்தனைகள் எனும் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான குழந்தைகள் மற்றும் சிறுமிகள் ராதை வேடமிட்டு நடனமாடினர்.
மேலும், கோதை ஆட்டம், கும்மி ஆட்டம், கோலாட்டம் நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நடனமாடினர். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.