விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது;
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில், காமராஜர் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தமிழக முன்னாள் முதல்வரும், சுதந்திர போராட்ட தியாகியுமான பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளகத்தில் உள்ள, காமராஜர் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.நிகழ்ச்சியில் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.