விருதுநகர் அருகே தீவிர தொழுநோய் ஒழிப்பு முகாம்: மத்தியக் குழு ஆய்வு

காரியாபட்டி தாலுகாவில் தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனை முகாம் ஜூலை- 17 முதல் ஆகஸ்ட்-3 வரை நடைபெறுகிறது

Update: 2023-08-02 08:45 GMT

விருதுநகர் அருகே காரியாபட்டியில் தீவீர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் அருகே காரியாபட்டியில் தீவீர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவில், தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனை முகாம் ஜூலை- 17 முதல் ஆகஸ்ட்-3 வரை நடைபெறுகிறது.

இம்முகாமில், காரியாபட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த சிறப்பு முகாமினை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மத்திய அரசின் மேலிட பார்வையாளர்கள் மருத்துவர்கள் லில்லி, ஸ்ரீலேகா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன்,தொழுநோய் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமுதா விருதுநகர் துணை இயக்குனர் யமுனா மதுரை துணை இயக்குனர் விஜயன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆரோக்கிய ரூபன்ராஜ், மற்றும் மாவட்ட தொழுநோய் கட்டுபாட்டு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொழு நோய் என்றால் என்ன... தொழுநோய், ஹேன்சன் நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது மைக்கோபாக்டீரியம் லெப்ரேயினால் ஏற்படும் ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும் . இந்த நோய் முக்கியமாக தோல், புற நரம்புகள், மேல் சுவாசக் குழாயின் மியூகோசல் மேற்பரப்புகள் மற்றும் கண்களை பாதிக்கிறது. தொழுநோய் குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை எல்லா வயதினருக்கும் ஏற்படுவதாக அறியப்படுகிறது. தொழுநோய் குணப்படுத்தக்கூடியது மற்றும் ஆரம்ப சிகிச்சையானது பெரும்பாலான குறைபாடுகளைத் தவிர்க்கிறது.

பரவும் முறை...

தொழுநோய் பரவுவதற்கான சரியான வழிமுறை தெரியவில்லை. குறைந்த பட்சம் சமீப காலம் வரை, தொழுநோயாளிகள் மற்றும் ஆரோக்கியமான நபர்களுக்கு இடையேயான தொடர்பு மூலம் இந்த நோய் பரவுகிறது என்ற நம்பிக்கை இருந்தது. சமீபகாலமாக சுவாசப் பாதை மூலம் பரவும் சாத்தியம் நிலவி வருகிறது. பூச்சிகள் மூலம் பரவுதல் போன்ற பிற சாத்தியக் கூறுகளும் உள்ளன, அவை முற்றிலும் நிராகரிக்கப்பட முடியாது.


Tags:    

Similar News